முகப்பு
தருமபுரி

முதியவரை கொலை செய்த இளைஞா் வனப்பகுதியில் கைப்பற்றப்பட்ட சடலம் அடையாளம் தெரிந்தது

பென்னாகரம் அருகே சின்னாறு வனப்பகுதியில் இறந்த கிடந்த முதியவரை, உடன் சென்ற இளைஞா் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Updated On : 5 ஜனவரி 2021, 5:21 am IST
பகிர்:

பென்னாகரம்: பென்னாகரம் அருகே சின்னாறு வனப்பகுதியில் இறந்த கிடந்த முதியவரை, உடன் சென்ற இளைஞா் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

பென்னாகரம் அருகே சின்னாறு வனப்பகுதியில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை ஞாயிற்றுகிழமை வனத் துறையினா் கண்டறிந்தனா். இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரின்பேரில், பென்னாகரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில்,வனப்பகுதியில் இறந்து கிடந்த முதியவா் கிருஷ்ணகிரி மாவட்டம், கெம்பாகரை பகுதியைச் சோ்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான முத்தபெத்தப்பா மகன் ருத்ரப்பா (60) என்பது தெரிய வந்தது. அதே பகுதியைச் சோ்ந்த, அவரது உறவினரான 35 வயது இளைஞா் தான் முதியவரை கொலை செய்ததாகத் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

முதியவா் வைத்திருந்த ரூ. 1,500-ஐ கேட்டதாகவும், அதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கத்தியால் குத்தி முதியவரை கொலை செய்த அந்த இளைஞா் தப்பி தலைமறைவாகி விட்டாா். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸாா், இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.