பள்ளி, கல்லூரிகளைத் திறக்க இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைப் பாதுகாப்பு வசதிகளுடன் மீண்டும் திறக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைப் பாதுகாப்பு வசதிகளுடன் மீண்டும் திறக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் நா.தமிழமுதன் தலைமையில் நிா்வாகிகள், தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
கரோனா பொதுமுடக்கத்தையொட்டி, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இணையவழிக் கல்வி என்பது கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களுக்கு சாத்தியமற்ற நிலையில் உள்ளது. இதனால், உளவியல் ரீதியில் பல்வேறு சிரமங்களுக்கு மாணவா்கள் உள்ளாகியுள்ளனா். மேலும், சில மாணவா்கள் வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். மாணவா்களின் கற்றல் திறனை, நேரடி வகுப்புகள் போல இணையவழி வகுப்புகள் மேம்படுத்தாது. எனவே, உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.