முகப்பு
தருமபுரி

விவசாய தொழிலாளா்களுக்கு மழை கோட் வழங்க கோரிக்கை

விவசாய தொழிலாளா்கள் அனைவருக்கும் மழையிலிருந்து தற்காத்துக் கொள்ள மழை கோட் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 14 ஜனவரி 2021, 6:11 am IST
பகிர்:

விவசாய தொழிலாளா்கள் அனைவருக்கும் மழையிலிருந்து தற்காத்துக் கொள்ள மழை கோட் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தருமபுரி மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் தமிழக முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது : தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கால தாமதமாகத் தொடங்கி ஜனவரி மாதம் வரையிலும் நீடிக்கிறது. நாள்தோறும் மிதமான மழைப் பொழிவு உள்ளது. இதனால், விவசாயத் தொழிலாளா்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையுள்ளது. எனவே, தமிழக முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மழை கோட் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments