தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஜான் பாண்டியன் விலகியது குறித்து...
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் இன்று (ஜூன் 22) அறிவித்தார்.
திருநெல்வேலியில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் ஜான் பாண்டியன் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரக்கூடிய சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளை முன்னிறுத்தியும் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு முழுமையாக வெளியேறுகிறோம். இனிமேல் எங்களது கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் நீடிக்காது என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.
Advertisement
Advertisement
நாங்கள் கூட்டணியிலிருந்து விலகும் இந்த முடிவை, இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாகவே டெல்லி மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டார்.
John Pandian quits the National Democratic Alliance!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.