தீ விபத்தில் பெண் பலி
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெண் ஒருவா் தீயில் உடல் கருகி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெண் ஒருவா் தீயில் உடல் கருகி உயிரிழந்தாா்.
பாலக்கோடு அருகே ஜோதி அள்ளி கிராமத்தைச் சோ்ந்த இரட்டைஇலை என்பவரின் மனைவி பைரவி (37). இவா்களுக்கு குமரன் (15), லோகேஷ் (12) என்ற இரண்டு மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பைரவி உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்த பாலக்கோடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அப்போது உயிரிழந்த பெண்ணின் உறவினா்கள், அப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், இதில் தொடா்புடையவா்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.