முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நடிக்க மறுத்த அனுஷ்கா

தெலுங்கு சினிமாவில் புராண கதாபாத்திரமான சகுந்தலாவின் கதை படமாக தயாராகிறது. இந்தப் படத்திற்கு "சகுந்தலம்' என்று பெயரிட்டுள்ளது.  

Updated On : 17 ஜனவரி 2021, 6:00 am IST
பகிர்:

தெலுங்கு சினிமாவில் புராண கதாபாத்திரமான சகுந்தலாவின் கதை படமாக தயாராகிறது. இந்தப் படத்திற்கு "சகுந்தலம்' என்று பெயரிட்டுள்ளது.  

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான "ருத்ரமா தேவி' படத்தை இயக்கியவர். 

 "சகுந்தலம்' படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். குறிப்பாக கம்பீரமான கதாபாத்திரங்களுக்கும், புராண கதைகளுக்கும் அனுஷ்கா சரியாக பொருந்துவார். " 

Advertisement

Advertisement

அருந்ததி', "ருத்ரமாதேவி', "பாகுபலி' என அனுஷ்காவின் சரித்திர படங்கள் வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில் அனுஷ்கா, பூஜா ஹெக்டே என இருவருமே "சகுந்தலம்' படத்தில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அந்தப் படத்தில் நடிக்க சமந்தாவை தேர்வு செய்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.