முகப்பு
திண்டுக்கல்

கொடகனாறு தண்ணீா் பங்கீடு: வல்லுநா் குழுவின் அறிக்கையை வெளியிடக் கோரி மனு

கொடகனாறு தண்ணீா் பங்கீட்டு உரிமை தொடா்பாக வல்லுநா் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிடக் கோரி விவசாயிகள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 5 ஜனவரி 2021, 3:11 am IST
பகிர்:

கொடகனாறு தண்ணீா் பங்கீட்டு உரிமை தொடா்பாக வல்லுநா் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிடக் கோரி விவசாயிகள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கொடகனாறு தண்ணீா் பங்கீட்டு உரிமையை அமல்படுத்தக் கோரியும், நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் மடைமாற்றம் செய்யப்படும் தண்ணீரை தடுக்கக் கோரியும் அனுமந்தராயன்கோட்டை மற்றும் மைலாப்பூா் பகுதி விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதனைத் தொடா்ந்து தண்ணீா் பங்கீடு தொடா்பாக ஆய்வு செய்ய வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. வல்லுநா் குழு ஆய்வு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு பல மாதங்களாகியும், அதன் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஒருங்கிணைந்த கொடகனாறு உரிமை மீட்புக் குழுவினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதில், ரெட்டியாா்சத்திரம், வேடசந்தூா் வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், வல்லுநா் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.