மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தின் மல்ஷிராஸ் வட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை பிக்கப் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரக் கிணற்றில் விழுந்தது. இந்த சம்பவத்தில் நான்கு பெண்கள், நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் பலியாகினர். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
பந்தர்பூரைச் சேர்ந்த, பெரும்பாலும் உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களான 15 பேர், மஸ்வதில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, தந்துல்வதி கிராமம் அருகே இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் ஏழு பேர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
Eight people, including four women and four children, were killed while seven others were injured on Sunday when a pick-up vehicle carrying them plunged into a roadside well in Malshiras tehsil in Solapur district, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.