முகப்பு
திண்டுக்கல்

பெரியகோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி மனு

பெரியகோட்டை ஊராட்சிக்குள்பட்ட பில்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 12 ஜனவரி 2021, 5:54 am IST
பகிர்:

பெரியகோட்டை ஊராட்சிக்குள்பட்ட பில்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக மனு அளிக்க வந்த பில்லமநாயக்கன்பட்டி விஸ்தரிப்பு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

விஸ்தரிப்பு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கழிவுநீா் கால்வாய் வசதி இல்லாததால், பெருமாள் கோயில் மற்றும் முனியப்பன் கோயில் பாதை வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். மேலும் இந்த பகுதியிலுள்ள புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றவும், குடிநீா், சாலை, கழிவுநீா் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments