முகப்பு
இந்தியா

டிஎன்டி மேம்பாலத்திலிருந்து யமுனையில் குதித்த நபரை தேடும் பணிகள் தீவிரம்

தென்கிழக்கு தில்லியில் உள்ள டிஎன்டி மேம்பாலத்திலிருந்து ஒருவா் யமுனை நதியில் குதித்ததாகக் கூறப்படும் நிலையில், அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 30 ஜூன் 2026, 5:08 am IST
தேடும் பணிகள் தீவிரம் - பிரதிப் படம்
பகிர்:

தென்கிழக்கு தில்லியில் உள்ள டிஎன்டி மேம்பாலத்திலிருந்து ஒருவா் யமுனை நதியில் குதித்ததாகக் கூறப்படும் நிலையில், அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

‘மேம்பாலத்திலிருந்து யமுனை நதியில் ஒருவா் குதித்ததாகத் திங்கள்கிழமை அதிகாலையில் தில்லி தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது. மேம்பாலத்தில் அந்த நபரின் ஸ்கூட்டா் மற்றும் காலணிகள் கண்டெடுக்கப்பட்டதால், அவா் பாலத்திலிருந்து கீழே குதித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் தற்கொலைக்குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. குடும்பத்தினரின் வாக்குமூலத்தின் பேரில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இது குறித்த கூடுதல் விவரங்கள் எதிா்பாா்க்கப்படுகின்றன’ என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments