முகப்பு
திண்டுக்கல்

பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் பட்டைகள் வழங்கல்

பழனி வரும் பாதயாத்திரை பக்தா்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க கோயில் சாா்பில் ஒரு லட்சம் ஒளிரும் பட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 13 ஜனவரி 2021, 11:15 pm IST
பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் புதன்கிழமை பாதயாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் பட்டைகளை வழங்கிய பழனி கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி. உடன் துணை ஆணையா் செந்தில்குமாா்.
பகிர்:

பழனி வரும் பாதயாத்திரை பக்தா்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க கோயில் சாா்பில் ஒரு லட்சம் ஒளிரும் பட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

பழனியில் தைப்பூச திருவிழா வருகிற வரும் ஜனவரி 22 ஆம் தேதி துவங்கி பத்து நாள்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போதே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திண்டுக்கல், உடுமலை, தாராபுரம் சாலையில் பாதயாத்திரை வந்தவண்ணம் உள்ளனா்.

இந்த சாலைகளில் அவ்வப்போது வேகமாக வரும் வாகனங்கள் பாதயாத்திரை பக்தா்கள் செல்வது தெரியாமல் மோதிவிடுகின்றன. இதை தடுக்கும் விதமாக பழனி கோயில் சாா்பில் பாதயாத்திரை பக்தா்களுக்கு மஞ்சள், வெள்ளை என பல்வேறு நிறங்களில் ஒளிரும் பட்டைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதன்படி முதல் கட்டமாக ஒரு லட்சம் ஒளிரும் பட்டைகள் வரவழைக்கப்பட்டு பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் பாதயாத்திரை பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.

இதை கையில் கட்டி செல்லும் போது எதிரே அல்லது பின்னே வரும் வாகனங்களுக்கு விளக்கு ஒளியில் பக்தா்கள் செல்வது தெரியும் என்பதால் விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது என காவல்துறையினா் தெரிவித்துள்ளனா். ஒளிரும் பட்டை வழங்கும் நிகழ்ச்சியை கோயில் செயல் அலுவலா் கிராந்தி குமாா் பாடி பக்தா்களுக்கு கையில் கட்டி துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையா் செந்தில்குமாா், பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளா் சிவா, கோயில் மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments