முகப்பு
புதுதில்லி

தில்லியில் அரசு திறந்த கடைகளில்  கிலோ ரூ.40-க்கு வெங்காயம்

தில்லியில் கடந்த பல நாள்களாக அதிகரித்துவந்த வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:29 am IST
பகிர்:

தில்லியில் கடந்த பல நாள்களாக அதிகரித்துவந்த வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது.

தில்லி காஜிபூர் உள்ளிட்ட முக்கிய மண்டிகளில் வெங்காய வரத்து அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

அண்டை மாநிலங்களில் பெய்துவந்த தொடர் மழை காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதனால், தில்லியில் வெங்காயத்துக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டு கிலோ ரூ. 80 என்ற அளவுக்கு விலை உயர்ந்தது. வெங்காய விலை உயர்வுக்கு எதிராக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தின.

வெங்காய விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தணிக்கும் வகையில், 1,000 இடங்களில் வெங்காய விற்பனைக் கடைகளை தில்லி அரசு திறந்தது.

அக்கடைகளில் வெங்காயம் கிலோ ரூ. 40 என விற்கப்படுகிறது. வெங்காய விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அரசு தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தில்லியின் பிரதான காய்கறிச் சந்தையான காஜிபூரில் வெங்காய வரத்து கடந்த இரு தினங்களாக அதிகரித்துள்ளது குறித்து, அந்த மண்டியின் அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "செவ்வாய்க்கிழமை மட்டும் வெங்காய வரத்து 2,700 டன்னாக அதிகரித்துள்ளது.

சில குடியிருப்புப் பகுதிகளில் சில்லறைக் கடைகளில் சற்று கூடுதல் விலையில் வெங்காயம் விற்கப்படுகிறது.  கிழக்கு தில்லியில் அரசு சார்பில் 150 இடங்களில் தாற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு ராஜஸ்தான் வெங்காயம் கிலோ ரூ.35-க்கும், மகராஷ்டிரா வெங்காயம் ரூ. 49-க்கும் விற்கப்பட்டது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.