முகப்பு
புதுதில்லி

ஷாதரா, திலக் நகருக்கு வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாதரா, திலக் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:06 am IST
பகிர்:

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாதரா, திலக் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஷாதரா தொகுதியில் சுரேந்தர் சர்மாவும், திலக் நகரில் ஜர்னெயில் சிங்கும் போட்டியிடுவர். சுரேந்தர் சர்மா, கர்கர்டூமா நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார். ஜர்னெயில் சிங், குடிநீர் சுத்திகரிப்பு ஆலை வைத்துள்ளார்.

இவர்களுடன் சேர்த்து இதுவரை 42 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சி கூறியுள்ளது.

Advertisement

Advertisement

தில்லியில் மொத்தம் 70 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நவம்பரில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.