தில்லியில் காவல் சரகம் 6 ஆக உயர்வு
தில்லி காவல் துறையின் சரகம் நான்கிலிருந்து ஆறாக உயர்ந்துள்ளது.
தில்லி காவல் துறையின் சரகம் நான்கிலிருந்து ஆறாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
"தலைநகரில் சட்டம் - ஒழுங்கு அமலாக்கத்தையும், கண்காணிப்பையும் மேம்படுத்தும் வகையில், இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தில்லி காவல் துறையில் தென் கிழக்கு, மத்தி, வடக்கு, தென் மேற்கு உள்ளிட்ட சரகங்கள் இருந்தன. தற்போது புதிதாக கிழக்கு, புது தில்லி சரகங்கள் இடம்பெறும். தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உத்தரவின் பேரில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்கள் இப் புதிய கிழக்கு சரகத்திலும், புது தில்லி மாவட்டம், ரயில்வே, மெட்ரோ ஆகியவை புது தில்லி சரகத்திலும் இடம்பெறும்' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
Advertisement
Advertisement