FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகை, நடிகர்கள், இயக்குநர்கள்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகை, நடிகர்கள், இயக்குநர்கள் பற்றி..

Updated On : 10 ஜூன் 2026, 11:20 am IST
இயக்குநர் பாரதிராஜா - file photo
பகிர்:

தமிழ் சினிமாவில், தனக்கென ஒரு சிம்மாசனத்தைப் போட்டு அமர்ந்திருந்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. திரைத்துரையில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு கொடிகட்டிப் பறந்தவர்கள் ஏராளம்.

ஒரு கதையைத் தேர்வு செய்துவிட்டால், அந்த கதையில் அவர் கற்பனை செய்த அந்த உருவத்தை அவரே தேடி நாயகியாக, நாயகனாக அறிமுகம் செய்து அவர்களுக்குள் இருக்கும் அந்த நடிப்பை பாரதிராஜா தன்னுடைய இயல்பான இயக்கும் பாணியில் வெளிக்கொண்டுவந்துவிடுவார்கள்.

அப்படித்தான் கிழக்கே போகும் ரயிலே படத்துக்காக ராதிகாவையும் அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக ராதாவையும் கொண்டு வந்தார்.

Advertisement

Advertisement

மண் வாசனை படத்தில், திரை வாசனையே இல்லாத ரேவதியை அறிமுகப்படுத்தினார். கடலோரக் கவிதைகள் படத்தில் ரேகாவைக் கொண்டு வந்து கடற்கரையில் நடக்கவிட்டார்.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிகர் கார்த்திக், மண் வாசனை படத்தில் பாண்டியன், புது நெல்லு புது நாத்து படத்தில் நெப்போலியன் போன்றவர்களையும் அறிமுகப்படுத்தி, ஒவ்வொருவரும் அவர்களது திறமையால் அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் நீங்க இடம் பிடித்தனர்.

இவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய பாக்யராஜ் மணிவண்ணன், மனோபாலா, பி. வாசு, ரத்தினகுமார், சீமான் போன்றவர்கள் புகழ்பெற்ற இயக்குநர்களாகவும் ஜொலித்தனர்.

1980ஆம் ஆண்டில் நிழல்கள் படம் மூலம் வைரமுத்துவை பாடலாசிரியராக அறிமுகப்படுத்திய பெருமையும் பாரதிராஜாவையேச் சேரும்.

summary

About the actors and directors introduced by the legendary director Bharathiraja...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments