FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!

இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது குறித்து...

இயக்குநர் பாரதிராஜா - bharathiraja
பகிர்:

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது பணிவான வணக்கங்களையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement

Advertisement

தமிழ்த் திரையுலகின் பெருமையை உலக அளவில் உயர்த்திய இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் நினைவைப் போற்றும் வகையில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள தேனியில் தமிழக அரசின் சார்பில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று எங்களது கோரிக்கையை தங்களிடம் முன்வைத்திருந்தோம்.

எங்களது கோரிக்கையை கனிவுடன் ஏற்று, இயக்குநர் இமயம் பாரதிராஜா நினைவாக தேனியில் தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

தமிழ்த் திரைப்படக் கலைக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்த ஒரு மாபெரும் கலைஞரின் நினைவைப் போற்றும் இந்த அறிவிப்பு, அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், குறிப்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

எங்களது கோரிக்கையை ஏற்று, பாரதிராஜாவின் கலைப் பங்களிப்பையும், தமிழ்த் திரையுலகின் வரலாற்றையும் மதித்து இந்தச் சிறப்பான அறிவிப்பை வெளியிட்ட தங்களுக்கு, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது இதயப்பூர்வமான நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மணிமண்டபம், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் நினைவை மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் வரலாற்றையும், அதன் மகத்தான கலைஞர்களின் பங்களிப்பையும் எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு வரலாற்றுச் சின்னமாகத் திகழும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

A memorial hall for Bharathiraja Film Directors Association thanks the Tamil Nadu government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments