ஷங்கர் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம்?
இயக்குநர்கள் ஷங்கர் - ஏஆர் முருகதாஸ் இணைந்து உருவாகும் புதிய படத்தின் தகவல் குறித்து...
இயக்குநர்கள் ஷங்கர் - ஏஆர் முருகதாஸ் இணைந்து புதிய படத்திற்கான கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் மூலம் தெரியவருகின்றன.
இயக்குநர் ஷங்கரின் கதைக் குழுவினருடன் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. கமர்ஷியல் சினிமாவுக்காக கலந்துரையாடலாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏஆர் முருகதாஸ் கதையை இயக்குநர் ஷங்கர் இயக்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இன்னும் உறுதிப்படுத்தாத இந்தத் தகவல்கள் சமூக வலைதளத்திலும் பரவி வருகின்றன.
Advertisement
Advertisement
இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கடைசியாக இயக்கிய மதராஸி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தினை இயக்குநர் ஷங்கர் பாராட்டி இருந்தார்.
ஷங்கர் இயக்கிய கடைசி படமான கேம் சேஞ்சர் மிகவும் சுமாராவ வரவேற்பைப் பெற்றது. அடுத்து அவர் மூன்று பாகங்களாக வேள்பாரி என்ற கனவுத் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பாக ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆக்ஷன் திரைப்படத்திற்கான கதையைத்தான் ஏஆர் முருகதாஸ் கூறினாரா என்ற தகவல் இன்னும் உறுதியாகவில்லை. ஏற்கெனவே கார்த்திக் சுப்புராஜ் கதையை ஷங்கர் கேம் சேஞ்சரில் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
சன்னி தியோல், ஜோதிகாவை வைத்து உருவாகும் ஹிந்தி படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கணேஷ் இயக்க, அந்தப் படத்துக்கான கதையில் ஏர் முருகதாஸ் பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியானது கவனிக்கத்தக்கது.
Are Shankar and AR Murugadoss collaborating on a film? Here’s what we know
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.