FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எந்தன் கண்ணம்மா... ஒன்ஸ் மோர் டிரைலர்!

ஒன்ஸ் மோர் டிரைலர் வெளியானது...

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர்
பகிர்:

நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்த ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “ஒன்ஸ் மோர்”. இப்படத்தில், நடிகை அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.

காதல் திரைப்படமாக எடுக்கப்பட்ட இப்படம் கடந்த ஆண்டு வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்கள் தள்ளிச்சென்றது. காரணம், சில காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

Advertisement

Advertisement

மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இருந்த திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்தது. முக்கியமாக, இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைப்பில் வெளியான, வா கண்ணம்மா பாடல் ரசிகர்களிடம் ஹிட் அடித்தது.

ஒன்ஸ் மோர் திரைப்படத்தை வருகிற ஆக. 28 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

The trailer for the movie Once More, starring Arjun Das and Aditi Shankar, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments