FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி நடித்த லவ்! ஓடிடி தொடர் வெளியீடு அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள லவ் ஓடிடி தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

17 செப்டம்பர் 2026, 3:59 pm IST
அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி
பகிர்:

அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள லவ் ஓடிடி தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூன் தாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக அவர் நடித்துள்ள ‘லவ்’ தொடர் வெளியாகவுள்ளது.

காதலில் சொதப்புவது எப்படி, மாரி படங்களின் இயக்குநர் பாலாஜி மோகன் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். இதில், அர்ஜூன் தாஸ் உடன் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இத்தொடரை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்.

காதல் கதைக்களத்தில் டேட்டிங் செயலிகளை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இத்தொடரின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, லவ் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு இன்று வெளியானது. இத்தொடர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வருகிற அக்டோபர் 2 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

summary

The release date of the Arjun Das - Aishwarya Lakshmi starrer Love OTT series has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments