வலிகள் நிறைந்த காதல்களால் சோர்வு: ஐஸ்வர்யா லட்சுமி
காதல்கள் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி பேச்சு...
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்கால காதல்கள் குறித்து பேசியுள்ளார்.
நடிகர்கள் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவான லவ் இணையத் தொடர் நெட்பிளிக்ஸில் தளத்தில் வெளியாகியுள்ளது. நகைச்சுவை - காதல் தொடரான இது ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.
இந்த நிலையில், இதன் புரமோஷனுக்காக நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்கால காதல்களின் போக்கு குறித்து பேசியுள்ளார்.
Advertisement
Advertisement
முக்கியமாக, “இன்று டேட்டிங் செயலிகள் அதிகம் வந்துவிட்டன. அதன் மூலம் நமக்குத் தேவையான துணைகளைச் சுலபமாகத் தேடவும் முடியும். ஆனால், அதில் சரியான துணையைக் கண்டுபிடிப்பது எளிமையானது அல்ல. தேர்வுகள் அதிகரிக்கும் போது நாம் உண்மையிலேயே குழம்பி விடுகிறோம். கடந்த காலங்களை ஒப்பிட இப்போது அந்தத் தேர்வுகள் அதிகரித்துள்ளதால் சரியான நபர்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. இது இக்காலத்தின் சிக்கல்.
காலங்கள் செல்லச் செல்ல காதல் குறித்த என் பார்வைகளும் மாறி வருகின்றன. ஒருவர் முன் முழுமையாக என்னை வெளிப்படுத்துவதும் அவரிடம் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதையும் உணர்ந்தால் அது நல்ல காதல். என் மனதில் உள்ளதைச் சொல்லவும் நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டும். சொல்லப்போனால், அப்படி ஒருவர் முன் என்னால் குழந்தையாகவும் இருக்க முடிய வேண்டும்.
திரைப்படங்களில் தீவிரமான காதல் கதைகளில் நடிக்க விரும்பினாலும் நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியான, எளிமையான காதல் கதைகள்தான் எனக்குப் பிடிக்கும். வலிகள் நிறைந்த காதல் கதைகளைக் கண்டு சோர்ந்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Actress Aishwarya Lekshmi has spoken about modern-day romances.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.