ராக்கா திரைப்படத்தில் நான் இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
ராக்கா திரைப்படம் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி..
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ராக்கா திரைப்படத்தில் நடிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ராக்கா எனப் பெயரிட்டுள்ளனர். உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்களின் மேற்பார்வையில் இதன் முக்கிய காட்சிகள் உருவாகி வருவதால் அவதார் போன்று மிகச்சிறப்பான காட்சியனுபவங்களக ராக்கா எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
மேலும், ஆச்சரியப்படும் வகையில் பான் உலகத் திரைப்படமாக ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளிலும் இப்படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ராக்கா வணிக ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் மிருணாள் தாக்கூர், ரஷ்மிகா மந்தனா, உள்ளிட்டோர் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இதில், வில்லியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் நடித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், ராக்காவில் தான் நடிக்கவில்லை என்றும் அதற்காக யாரும் தன்னை அணுகவில்லை என்றும் ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், ‘யாராவது அந்த வாய்ப்பை வாங்கிக்கொடுங்கள்’ என ஜாலியாகவும் கூறினார்.
Actress Aishwarya Lekshmi has stated that she is not acting in the movie Raakka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.