இதற்காக வருத்தப்பட்டேன்: ஐஸ்வர்யா லட்சுமி
லவ் திரைப்பட அனுபவங்களைப் பகிர்ந்த் ஐஸ்வர்யா லட்சுமி...
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகர் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடித்த லவ் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி - 2 திரைப்படமும் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. அண்மையில், மலையாளத்தில் இவர் நடிப்பில் உருவான ஆஷா திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
தற்போது, இவரும் நடிகர் அர்ஜுன் தாஸும் இணைந்து நடித்த லவ் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அக். 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, “நானும் அர்ஜுன் தாஸும் முன்பே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க இருந்தோம். ஆனால், அது நடக்கவில்லை. இதற்காக வருத்தப்பட்டேன். இப்போது லவ் திரைப்படத்தில் அது நடந்துவிட்டது. நீண்ட நாள்களாக காதல் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தது. இதில், தாரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் சொந்த வாழ்க்கையையொட்டி இக்கதாபாத்திரம் 80 சதவீதம் சரியாக இருப்பதால் நடிப்பதும் இயல்பாக இருந்தது. நல்ல விஷயங்கள் நடக்க காலம் தேவைப்படுகிறது. லவ் திரைப்படம் உங்களுக்குப் பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Actress Aishwarya Lekshmi has spoken about the movie Love, in which she starred alongside actor Arjun Das.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.