✕
முகப்பு

தந்தையுடன் மகன்... வைரலாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த புகைப்படம்!

சமூக வலைதளத்தில் வைரலாகும் ரஜினி - யாத்ரா தனுஷின் புதிய புகைப்படம் குறித்து...

25 வினாடிகள் முன்பு
ரஜினிகாந்த் உடன் யாத்ரா தனுஷ். - படம்: இன்ஸ்டா / ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த தனது பெயரன் யாத்ரா உடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக இருக்கிறார். கடைசியாக இவர் ரஜினி - விஷ்ணு விஷாலை வைத்து லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது, டெக்ஸ்லா எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தனது தந்தையும் மகனும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து சமூக வலைதளத்தை அதிர வைத்துள்ளார்.

Advertisement

Advertisement

75 வயதாகும் ரஜினிகாந்த் 20 வயதான யாத்ரா உடன் ஸ்டைலாக நடந்துவரும் புகைப்படம் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. யாத்ரா வெள்ளை நிற உடையுடனும் ரஜினி டி ஷர்ட் - ஜீன்ஸ் அணிந்து நடந்து வருகிறார்கள்.

நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தர்மன் படத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - நடிகர் தனுஷ் 2004ல் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா (20), லிங்கா (16) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் 2022ல் தங்களது விவாகரத்தை அறிவித்தார்கள்.

summary

Aishwarya Rajinikanth shares rare picture of father Rajinikanth with son Yathra; goes viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.