ஓடிடியில் வெளியானது ஜெயிலர் - 2!
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...
இயக்குநர் நெல்சன் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
கடந்த அக். 15 ஆம் தேதி உலக அளவில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் ரூ. 835 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தமிழ் சினிமாவின் நம். 1 வசூல் திரைப்படமாக மாறியுள்ளது.
Advertisement
Advertisement
மேலும் இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜெயிலர் முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத்தே, இரண்டாம் பாகத்துக்கும் இசையமைத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பான் இந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று (நவ. 12) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.