FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரஜினிகாந்த் பிறந்தநாள்! நீக்கப்பட்ட காட்சிகளுடன் ஜெயிலர் 2 ரீ-ரிலீஸ்?

ஜெயிலர் 2 ரீ-ரிலீஸ் செய்யப்படுவது குறித்து...

ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த்.
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளையொட்டி ஜெயிலர் 2 ரீ-ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் நெல்சன் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம், கடந்த அக். 15 ஆம் தேதி உலக அளவில் வெளியானது. மேலும், ரூ. 835 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தமிழ் சினிமாவின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் படத்தின் நீளம் கருதி மோகன்லால் நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, படத்தில் நடிகர் சந்தானமும் நடித்ததாகவும், அவரின் காட்சிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், டிச. 12-ல் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளையொட்டி, டிச. 11-ல் ஜெயிலர் 2 படத்தை ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புதிய சென்சார் சான்றிதழ் பெறப்பட்டு சந்தானத்தின் நீக்கப்பட்ட காட்சிகளுடன் கூடுதல் காட்சிகளும் சேர்க்கப்பட்டு ஜெயிலர் 2 ரீ-ரிலீஸ் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

summary

Rajinikanth's Birthday: 'Jailer 2' to be re-released with deleted scenes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.