ஒன்ஸ் மோர் படத்தில் இடம்பெற்ற கவிதை வெளியீடு!
அர்ஜுன் தாஸ் நடிக்கும் ’ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற கவிதை வெளியிடப்பட்டுள்ளது.
அர்ஜுன் தாஸ் நடிக்கும் ’ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற கவிதை வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ’ஒன்ஸ் மோர்’. இப்படத்தில், அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ’வா கண்ணம்மா’ பாடல் முன்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இக்கால இளைஞர்களின் காதலைப் பேசும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டே வெளியாகவிருந்த இப்படம் சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில், வருகிற ஆகஸ்ட் 28 அன்று வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் இடம்பெற்ற ’பதில் சொல்’ என்ற கவிதை இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இதனை எழுதியுள்ளார்.
A poem featured in the film Once More, starring Arjun Das, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.