நல்ல கதைகளில் நடிக்க விரும்புகிறேன்: அதிதி ஷங்கர்
தன் கதைத் தேர்வுகள் குறித்து நடிகை அதிதி ஷங்கர்...
நடிகை அதிதி ஷங்கர் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதையே விரும்புவதாகக் கூறியுள்ளார்.
விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதிதி ஷங்கர். தன் துறுதுறுப்பான பேச்சால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர்.
தொடர்ந்து, மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். அப்படம், விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிப்படமானது. இறுதியாக, விஷ்ணுவரதன் இயக்கத்தில் நேசிப்பாயா படத்தில் நடித்திருந்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
Advertisement
Advertisement
அதேநேரம், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், ‘ஒன்ஸ் மோர்’ என்கிற படத்தில் நடித்து முடித்தார். இதில் நாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். நீண்ட நாளாக வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், வருகிற ஆக. 28 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், பேட்டியொன்றில் பேசிய நடிகை அதிதி ஷங்கர், “ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் கதையும் அதில் காட்டப்பட்ட காதலும் வித்தியாசமானது. நான் கடந்த 4 ஆண்டுகளில் நான்கு திரைப்படங்களில்தான் நடித்துள்ளேன். நிறைய படங்களை இஷ்டத்திற்குத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டிய அவசியம் இல்லையென நினைக்கிறேன். நல்ல கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன். ஒன்ஸ் மோரில் என்னைவிட அர்ஜுன் தாஸுக்கு நடிகை சோனாவுடனான கேமிஸ்ட்ரி காட்சிகள் நன்றாக உள்ளன. இப்படம் குடும்பங்களுடன் பார்க்கும் காதல் நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Actress Aditi Shankar has stated that she prefers to choose and act in good stories.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.