FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

என் திரைப்படங்களில் நிறைய கவனிக்கப்படவில்லை: அசோக் செல்வன்

தன் திரைப்படங்கள் குறித்து அசோக் செல்வன் பேச்சு...

9 செப்டம்பர் 2026, 12:16 pm IST
அசோக் செல்வன்
பகிர்:

நடிகர் அசோக் செல்வன் தான் நடித்த நல்ல திரைப்படங்களில் நிறைய கவனிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் என அறியப்படுபவர் அசோக் செல்வன். துணை கதாபாத்திரங்களில் நடித்து மெல்ல மெல்ல சினிமாவில் தனக்கான நாயக இடத்தைப் பிடித்தவருக்கு வணிகமும் இருக்கிறது. இதனால், அசோக் செல்வனின் திரைப்படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்க ஆர்வமும் காட்டுகின்றன.

இறுதியாக, தக் லைஃப் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின், அவர் நடிப்பில் திரைப்படங்கள் வெளியாகமால் இருந்தன. தற்போது, அசோக் செல்வன் நடித்த அன்பில் அவன் திரைப்படம் செப். 25 ஆம் தேதி வெளியாகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் அசோக் செல்வன், “நான் நடித்தவற்றில் பல திரைப்படங்கள் கவனிக்கப்படாமல் போய்விட்டன. கூட்டத்தில் ஒருவன், சம்டைம்ஸ், சில நேரங்களில் சில மனிதர்கள், தீனி மற்றும் நித்தம் ஒரு வானம் ஆகியவை இன்னும் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும். முக்கியமாக, ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற நித்தம் ஒரு வானம் திரைப்படம் திரையரங்க வெளியீட்டில் எதிர்பார்த்த வணிகத்தைச் செய்யவில்லை. அது தரமான திரைப்படம். அதற்காக நிறைய உழைத்தோம். அந்தக் கதாபாத்திரமாக மாற சிரமங்களும் இருந்தன. அப்படம், திரையரங்குகளில் ஓடவில்லை எனத் தெரிந்ததும் மன உளைச்சலுக்கு ஆளானேன். நித்தம் ஒரு வானத்தை ஓடிடியில் 10 முறைக்கு மேல் பார்த்ததாக என்னிடம் சொன்னவர்கள் உண்டு. அவர்கள் ஒருமுறை திரையரங்கில் பார்த்திருக்கலாமே?” எனத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Actor Ashok Selvan has stated that many of the good films he acted in did not receive much attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments