ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடிக்க காரணம் இதுதான்: விஜய் சேதுபதி
ஜெயிலர் - 2 குறித்து நடிகர் விஜய் சேதுபதி...
நடிகர் விஜய் சேதுபதி திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பான் இந்திய அளவிலும் கவனம் பெற்று வருகிறார். இறுதியாக இவர் நடித்த மகாராஜா, தலைவன் தலைவி ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாகின. தற்போது, ஸ்லம்டாக் படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவியுடன் நடித்தும் வருகிறார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதியிடம் அதிக திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இனிமேல் சிறப்பு தோற்றங்களில் நடிக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டேன். ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்ததற்குக் காரணம் ரஜினி சார்தான். அவருடன் இணைந்து நடிக்கலாம் என ஆசைப்பட்டு ஒப்புக்கொண்டேன். மற்றபடி, இனி சிறப்பு தோற்றங்களில் நடிக்கப்போவதில்லை. காரணம், சில படங்களில் நான் சில நிமிடங்கள் நடித்தாலும் போஸ்டரில் புகைப்படம் போடுகிறார்கள். அது என் அடுத்தடுத்த திரைப்படங்களைப் பாதிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
Actor Vijay Sethupathi has stated that he has stopped making cameo appearances in films.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.