அசோக் செல்வன் - நிமிஷா சஜயன் படத்தின் ரிலீஸ் அப்டேட்!
நடிகர் அசோக் செல்வன் உடன் நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கும் புதிய படத்தின் அப்டேட் குறித்து...
நடிகர் அசோக் செல்வன் உடன் நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கும் புதிய படத்தின் ரிலீஸ் குறித்து அதன் தயாரிப்பாளர் அப்டேட் கூறியுள்ளார்.
மில்லியன் டாலர் பிக்சர்ஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கியுள்ளார்.
நடிகர் அசோக் செல்வனின் 24ஆவது படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தினை இந்தாண்டு இறுதியில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் பேசியிருப்பதாவது:
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் பயணம் மிகவும் நீண்டது. சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. எங்கள் தயாரிப்பில் புதிய படங்களை வெளியிட முனைப்புடன் இருக்கிறோம்.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அக்டோபர் முதல் டிசம்பருக்குள் எப்போது படங்கள் வரவில்லையோ அந்தத் தேதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்தப் படம் மிகவும் சுவாரசியமானது என்றார்.
இந்தப் படத்தின் பெயர், மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் குழு விவரங்கள், ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படுமெனக் கூறினார். கடைசியாக நிமிஷா சஜயன் டிஎன்ஏ என்ற படத்தில் நடித்திருந்தார். அசோக் செல்வன் தக் லைஃப் படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Ashok Selvan - Nimisha Sajayan film gets release window
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.