கிங் - 100 நடிகர் அசோக் செல்வன் போஸ்டர்!
கிங் - 100 நடிகர் அசோக் செல்வனுக்கான போஸ்டர்...
நடிகர் நாகர்ஜுனாவின் 100-வது திரைப்படத்திற்கான அசோக் செல்வன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அன்னபூர்னா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் நாகர்ஜுனாவின் 100-வது திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை, நித்தம் ஒரு வானம், மேட் இன் கொரியா ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் இரா. கார்த்தி இயக்கி வருகிறார்.
அரசியல் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு கிங் 100 எனத் தற்காலிகமாகப் பெயரிட்டுள்ளனர். இதில், நடிகர் அசோக் செல்வன் நடிகைகள் தபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் கர்ணா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இந்தப் படம் வரும் டிச.24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அன்று நடிகர் ஷாருக்கானின் கிங் திரைப்படமும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.