✕
முகப்பு

ஓடிடியில் வெளியான அசோக் செல்வனின் அன்பில் அவன்!

அசோக் செல்வனின் அன்பில் அவன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருப்பது குறித்து...

22 வினாடிகள் முன்பு
அன்பில் அவன் போஸ்டர். - எக்ஸ்
பகிர்:

அசோக் செல்வனின் அன்பில் அவன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்பில் அவன்.

ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அசோக் செல்வனின் சகோதரி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக உருவான அன்பில் அவன், கடந்த் அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

மேலும் இந்தப் படத்தில், நடிகர்கள் கதிர் பாலு, மகா தில்லி கணேஷ், சாபமோன் அப்து சமத், ரேவதி என பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் அன்பில் அவன் திரைப்படம் இன்று (நவ. 20) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

summary

Ashok Selvan's film 'Anbil Avan' has been released on an OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.