அன்பில் அவன் வெளியீட்டுத் தேதி மாற்றம்!
அன்பில் அவன் புதிய வெளியீட்டுத் தேதி....
நடிகர் அசோக் செல்வனின் அன்பில் அவன் திரைப்பட வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் ‘அன்பில் அவன்’ என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.
ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அசோக் செல்வனின் சகோதரி தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவான இப்படம் செப். 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அக். 2 ஆம் தேதி வெளியீடு செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், ”கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்தத் திரைப்படம் மிகுந்த அன்புடனும் அர்ப்பணிப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அதற்குரிய பிரம்மாண்டத்துடனும், பெரிய அளவிலான வெளியீட்டுடனும் உங்களை வந்தடைய இந்த ஒரு வாரம் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் அவசியமானதே.
இந்தப் பயணத்திற்காக நாங்கள் தயாராகி வரும் நிலையில், உங்கள் தொடர்ந்த அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் உங்களைச் சந்திப்போம் என உறுதியளிக்கிறோம். இந்தக் கதையை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக எங்களுடன் இருப்பதற்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளனர்.
There has been a change in the release of actor Ashok Selvan's film Anbil Avan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.