அசோக் செல்வனின் அன்பில் அவன் டிரைலர் தேதி!
அன்பில் அவன் டிரைலர் தேதி....
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவான அன்பில் அவன் திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.
ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
நீண்ட நாள்களாக அசோக் செல்வன் நடிப்பில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், செ. 25 ஆம் தேதி ’அன்பில் அவன்’ வெளியாகவுள்ளதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (செப். 17) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The trailer release date for the film Anbil Avan, starring actor Ashok Selvan, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.