முகப்பு
புதுதில்லி

பிரான்ஸ் பெண்ணிடம் நூதன முறையில் மோசடி: இரு இளைஞர்கள் கைது

பிரான்ஸ் பெண்ணிடம் தங்க ஆபரணங்களை ஏற்றுமதி தொழில் தொடங்க ஆசை காட்டி மோசடி செய்த சம்பவத்தில் தில்லியைச்

Updated On : 12 செப்டம்பர் 2013, 10:47 am IST
பகிர்:

பிரான்ஸ் பெண்ணிடம் தங்க ஆபரணங்களை ஏற்றுமதி தொழில் தொடங்க ஆசை காட்டி மோசடி செய்த சம்பவத்தில் தில்லியைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஒருவரைத் தேடி வருகின்றனர்.

இச் சம்பவம் குறித்து தில்லி போலீஸார் புதன்கிழமை கூறியது:

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் மெலினீ. இவர் கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்தார். அப்போது, தரம்சாலா பகுதியில் போபாலைச் சேர்ந்த சூர்யா என்பவரைச் சந்தித்தார். அவருடன் நட்பாகப் பழகினார்.

Advertisement

Advertisement

அவர், தில்லி இந்திரா விஹார் காலனியைச் சேர்ந்த ரிஷி ராஜ் என்பவரை மெலினீக்கு அறிமுகப்படுத்தினார். இந் நிலையில், கடந்த ஜூலை மாதம் மெலினியை சந்தித்த ரிஷி ராஜ் தங்க ஆபரண ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டால் அதிக வருவாய் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறினார். அவரும் அவரது பேச்சில் நம்பிக்கை வைத்தார்.

இதையடுத்து, தில்லியில் இருந்து தங்க நகைகளை அஞ்சலகம் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு  மெலினீ பெயரில் அனுப்புவது போல் செயற்கை நகைகளை பார்சல் செய்து கரோல் பாக் பகுதியைச் சேர்ந்த பிரவீண் என்பவரிடம் பதிவு செய்தனர். அவர் அஞ்சலக ஊழியர் போல் நடித்து அதைப் பெற்றுக் கொண்டார்.  அதன் பிறகு, ரிஷி ராஜ் சுங்கத் துறை அதிகாரி போல் மெலினீயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்சலில் பதிவு செய்த நகைக்குரிய "பில்'லை காண்பிக்க வேண்டும் என்று கேட்டு மிரட்டினார்.

இதையடுத்து, தில்லியில் உள்ள ஒரு நகைக் கடையில் தனது கடன் அட்டையைப் பயன்படுத்தி மெலினீ நகைகள் வாங்கினார். அந்த நகையை ரிஷியும், அவரது நண்பர் சூரியாவும் மெலினீயிடம் மோசடி செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்தி ரிஷி ராஜ், கூரியர் கடை நடத்தி வரும் பிரவீண் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இச் சம்பவத்தில் சூர்யாவைத் தேடி வருவதாக போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.