இயக்குநர்கள் உருவாக பாதை அமைத்து தந்த பிதாமகன் பாரதிராஜா: சேரன் இரங்கல்!
இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு சேரன் இரங்கல் தெரிவித்தது தொடர்பாக...
இயக்குநர்கள் உருவாக பாதை அமைத்து தந்தவர் பாரதிராஜா என்று நடிகரும் இயக்குநருமான சேரன் பதிவிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று(ஜூன் 10) சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
பாரதிராஜாவின் மறைவுக்கு இயக்குநரும் நடிகருமான சேரன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
அவரது பதிவில், ”எண்ணற்ற இயக்குநர்கள் உருவாக பாதை அமைத்து தந்த எங்கள் பிதாமகன்.. அலங்கரிக்கப்பட்ட முகங்களையும் அலங்கார வாழ்க்கைகளையும் அடையாளமாக கொண்ட தமிழ் சினிமாவில் எதார்த்த முகங்களையும் இயல்பான மக்களின் வாழ்க்கையும் பதிவு செய்து தமிழ் சினிமாவின் அடையாளத்தை மாற்றிய போராளி, படைப்பாளி, ஆசான், அய்யா, அப்பா, ஆளுமை, இமயம் உறைந்தது.
பாரதிராஜா அவர்களின் தடையமின்றி தமிழ் சினிமா கிடையாது.. எதிர்காலத்திலும் ஒவ்வொரு தமிழ்சினிமாவின் படைப்புகளிலும் எங்கள் அய்யனின் ஆன்மா வாழும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Actor and director Cheran has posted that Bharathiraja is the one who paved the way for the emergence of directors.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.