ஆன்மிகமும் தொழில் நுட்பமும்: சமநிலை காண்போம்
பேஸ் டூ பேஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜியுடன் கலந்து கொள்ளலாம் பேஸ்புக்கில் நேரலையாக ஜூன் 23, 2013. ஞாயிறு மாலை 7.30 முதல்
ஒரு குழந்தை முதன் முதலில் கற்கும் 100 சொற்களுள் ஒன்றாக விளங்கும் கூகுல் காலகட்டத்தில் தான் நாம் வாழ்கிறோம் இக்காலகட்டத்தில் ஒரு சிநேகிதனைச் சம்பாதிக்க நம் கையை நீட்ட வேண்டிய அவசியமில்லை.வெறும் விரலின் தட்டு ஒன்றே போதும் .இவ்வுலகின் தினசரி தகவல்கள் யாவும் விரல் நுனியில் நமக்குக் கிடைக்கிறது. வலைத் தளத்தில் மொத்த மனிதர்களும் - தெரிந்தோர் தெரியாதோர் யாவரும் இணைக்கப்பட்டு ஒவ்வொருவருக்காகவும் ஒவ்வொருவரும் காத்து இருக்கிறார்கள் - உண்மையில் அ வர்கள் அங்கு இல்லாத போதும். ஆயிரக்கணக்கான மைல்களால் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் இன்று ஒருவரை ஒருவர் பார்க்க , ஒருவரோடொருவர் பேச இயலும்.- உண்மையில் அவர்கள் அங்கு இல்லாதபோதும். ஆயிரக் கணக்கான குடும்பங்கள் இன்று ஒருவரை ஒருவர் பார்க்க , ஒருவரோடொருவர் பேச இயலும்- தொழில் நுட்பத்தின் உதவியால்.வெகு தொலைவிலுள்ள கிராமங்களில் வாழும் குழந்தைகள் - சில திழில் நுட்ப உபகரணங்கள் வாயிலாக வெளி உலகினைச் சற்றே பார்க்க இயலும். மருத்துவ உலகில் , நோய்களைக் கண்டறிவது, அவர்கள் உபயோகிக்கும் மருத்துவ தொழில் நுட்பத்தின் துல்லியத்தைச் சார்ந்தே பெரிதும் உள்ளது எனலாம்.
தொழில் நுட்பத்தின் படைப்பாளிகளாகவும்,உபயோகிப்போராகவும் இருக்கும் நாம் ,மிகுந்த சக்தி படித்தவர்களாகி உள்ளோம். இச் சக்தியானது, தொழில் நுட்பத்தின் மேல் முழுமையாகச் சார்ந்து இருப்பதன் வாயிலாகவே கிடைத்துள்ளது.எதனையும் ஆராய்ந்து கண்டுபிடிக்கவும், அது பற்றி அறியவும் நமக்குள் இருக்கும் உற்சாகமானது , வலைதள தேடுதலுடன் நின்று விடுவதாக உள்ளது.நாம் வெளியில் சென்று இயற்கையை ஆராய்வதில்லை. ஒரு பட்டனைத் தொட்ட மாத்திரத்தில் நமக்குத் தேவையான விஷயங்கள் கிடைப்பது , பெரும் உதவியாக இருக்கையில், பனியினைத் தொடுவதால் உண்டாகும் அனுபவத்தையோ,பாயும் நதியின் குளுமையையோ ,கொலராடோ பாறைகளின் கம்பீரத்தையோ, மிசிசிபி நதியின் சலனமற்ற அமைதியையோ - எதனாலும் ஈடுசெய்ய இயலாது.
எதனைப் பற்றியும் கற்று அறிவது , உலக வலைத் தளத்துடன் இணைவதன் மூலம் எளிதாக இருக்கையில், எதனையும் ஆராய்ந்து கண்டு பிடித்து, நேரடியான தகவல்களைக் கற்கக் கூடிய அந்த உற்சாகமானது வெகு வேகமாக மறைந்து வருகிறது.கையில் உண்மையான அனுபவம் மட்டுமே மீந்து உள்ளது.இது எவ்வகையிலும் உண்மையாகாது.
Advertisement
Advertisement
நம் ஆன்மிகத் தேடுதலுக்கு தொழில் நுட்பம் எவ்வகையில் உதவவல்லது என நாம் கண்டு பிடிக்க வேண்டும். தொழில்நுட்பத்தினை உபயோகிக்க ஓர் சரியான பாதை எது? அதனை எவ்வாறு கண்டு பிடிப்பது? நமக்குக் கிடைக்கும் தகவல்களின் பேரில் எவ்வளவு சார்ந்து இருப்பது?
எப்போது நம் விழிப்புணர்வினைச் சார்வது? இவற்றினிடையே சமன் செய்வது ஓர் மிக நுண்ணிய கோடு .தகவல்களின் மூலம் நம் அறிவினை [ஞானம்] ஆழப்படுத்திக் கொள்வதும், அதே சமயம் உண்மையான அனுபவத்தினால் நம் பார்வையை விரிவாக்குவதும் ஓர் திறமை எனலாம்.
அறிந்து கொள்ளும் வாய்ப்பினுக்கு அளவுக்கு அதிகமான இடம் கொடுத்தல், சோர்வு போன்ற அபாயத்தினைத் தவிற்கவும் படைப்பாற்றலையும், உற்சாகத்தினையும் பெருக்கவும் இத் திறமையும் சமன்பாடும் அவசியம். இந்நிலையில் தான் ஆன்மிகம் பெரும் சொத்தாக மாறுகிறது.
ஆன்மிகம் மாற்றத்திற்கு உட்படாத ஒரு உறுதியான கொள்கை அல்ல. அது ஒரு சக்தி வாய்ந்த சுறுசுறுப்பான செயற்பாடு. சந்தர்பங்களிலும், சூழலிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்து ஒத்துப்போகக்கூடியது , தன்னை மாற்றிக் கொள்ளக் கூடியது.இப் பண்பு, தொழில் நுட்பச் சூழ்நிலைக்கு மிக மிக அவசியம். ஒருவர் தம்மை நிகழ்வுகளுக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ளவும், நிகாஹ் காலம் வரை கணக்குகளில் சரியாக இருக்கவும் இவ்வான்மிகப் பண்பு மிக மிக அவசியம். தொடர்ந்து முன்னணியில் நிற்க தொழில் நுட்பத்துடனான பந்தயத்தில் ஈடுபட்டு இருக்கையில் அதனைப் படைத்த நம் 'மனதினை' மறக்கக் கூடாது. நம் கைப் பேசிகளிலும், மடி- கணினிகளிலும் [ லாப்-டாப் ] சக்தியைச் சேமிக்க பழக்கப்பட்டுள்ளோம். நமக்குள் சக்தியினை மேம்படுத்த என்ன செய்யலாம்? மனித மனம் திறமை வாய்ந்ததாகச் செயல்பட , அதனை தியானத்தின் வாயிலாகச் சக்தி பெறச் செய்ய வேண்டும். தியானம் மனிதனைக் கையாளுவதற்கான தொழல் நுட்பம். தியானம் மனதினை ருமுகப்படுத்துகிறது.
மனதினைக் கையாள வல்ல நுட்பமான கலை அதுவே. சஞ்சலமான மனதினை அமைதிபடுத்தவல்லது
நம்மை நம் மூலத்துடன் இணைத்து நமக்குள் நம் உரைவிடத்திற்குவரச் செய்கிறது. வெறும் இன்டர்நெட்டுடன் இணைவது மட்டும் முக்கியமல்ல, நம் உள்ளார்ந்த வலைதளத்துடன் [ இன்னெர்நெட் ] நம்மை இணைத்துக் கொள்வது மிக மிக அவசியம்.
ஒரு குழந்தை பேச ஆரம்பிக்கும் முன்பே , அதன் தாய் அக் குழந்தைக்குத் தேவையானதை தன விழிப்புணர்வின் வாயிலாக அறிகிறாள். இதயத்தின்
மொழியை அறிந்த பெரும் ஆசிரியர் அவளே.நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ளவற்றுடன் நம்மை இணைக்கவல்ல திறமை நமக்குள் ஏற்கனவே உள்ளது.அதனை வளர்த்து பாதுகாக்க வேண்டியது வசியம். இப் பிரபஞ்சத்துடன் இணைய ஆன்மிகமே நுழைவு கோல் . நாம் தான் மூலம் எனவும்,
பிரதானமான அறிவு நுட்பத்துடன் எப்போதுமே இணைந்து உள்ளோம் எனவும் அறியும் பொழுது ,யாவரும் நம்மைச் சார்ந்தோரே எனும் உணர்வுடன் நமக்குக் கிடைத்துள்ள தொழில் நுட்பத்தின் திறமையின் வாயிலாக மறுமலர்ச்சி ஏற்படுத்தவேண்டிய பொறுப்புடனும் நாம் யாவரும் முன்னேறலாம்.
அணு ஆயுதத்தினை வெடிக்கச் செய்யவல்ல அதே விரலினால் அமைதியையும் நிலை நாட்டலாம். இச் சமநிலையான கோட்டின் மேல் முயற்சியற்ற வசீகரத்துடன் நடை பயிலும் அத்திறமையை தான் தியானம் நமக்குள் இயற்கையாகவே நிறைக்கிறது.
அடுத்தவரின் நலனில் அக்கறை கொள்ளுதலும், பங்கு கொள்வதுமாகிய நற்பண்புகளுடன் வாழ்வதும்,உ யர்ந்த உண்மையையும் , சந்தோஷத்தையும் தேடுவதுமே , பிறருக்கு அன்பும், ஞானமும் அளிப்பதாகிய , ஒரு தனி மனிதன் ஆன்மிகத்தின் வாயிலாக தனக்குள் முழுமையாக மலர்ச்சி பெற தொழில்நுட்பம் ஓர் உதவும் உபகரணமாக வாழ்வினைக் கொண்டாட்டமாக்கும் இப்பயணத்தில் இருத்தல் வேண்டும்.
( பானுமதி நரசிம்மன் உலக அமைதியின் தூதுவரான ஸ்ரீஸ்ரீரவிசங்கர்ஜியின் சகோதரி)
குறிப்பு: இணையதளத்தில் வெளியிடப்படும் சிறப்புக் கட்டுரை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.