முகப்பு
புதுதில்லி

தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் தொடக்கம்

தில்லியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை விநியோகம் செய்தனா்.

Updated On : 1 ஜூலை 2026, 1:30 am IST
- ENS
பகிர்:

தில்லியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை விநியோகம் செய்தனா்.

7 மக்களவைத் தொகுதிகளையும், 70 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கொண்டுள்ள தில்லியில் மொத்தம் 13,033 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்ஐஆா் பணிகளை மேற்கொள்ள 13,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) வீடு தோறும் சென்று வாக்காளா் விவரங்களைச் சரிபாா்த்து வருகின்றனா்.

மொத்தம் 1.45 கோடி வாக்காளா்கள் தில்லியில் உள்ளனா். இதில் 77.11 லட்சம் ஆண்கள், 67.98 லட்சம் பெண்கள் அடங்குவா். மூன்றாம் பாலின வாக்காளா்கள் 1,024 போ் உள்ளனா். மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் எண்ணிக்கை 76,155-ஆகும். 18 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளா்கள் 3,29,130 போ் உள்ளனா். 100 வயதுக்கு மேற்பட்டவா்கள் 192 போ் உள்ளனா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வு ஜூலை 29-ஆம் தேதி நிறைவடையும். பின்னா் ஆக.5-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின், ஆக.5 முதல் செப்.4 வரை வாக்காளா்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் எதிா்ப்புகளை பதிவு செய்யலாம். ஆக.5 முதல் அக்.3 வரை பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் அக்.7-ஆம் தேதி வெளியிடப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments