சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் துவக்கம்
சட்டப்படிப்பில் சேர மாணவர்களுக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று முதல் துவங்கியது.
சட்டப்படிப்பில் சேர மாணவர்களுக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று முதல் துவங்கியது.
விண்ணப்பப் படிவங்கள் அரசு சட்ட கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் பெற்று கொள்ளலாம். அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எழு இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் பி.ஏ., பிஎல் ஐந்தாண்டு சட்டப் படிப்பும், பி.எல் என்ற மூன்றாண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சட்ட பள்ளியில் நடத்தப்படும் பி.ஏ., பி.எல் (ஹானர்ஸ்), பி.காம்-பி.எல்(ஹானர்ஸ்), பி.எல்(ஹானர்ஸ்) ஆகிய படிப்புகள் உள்ளன. இப்படிப்புக்கு +2வில் 70 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.1000 ஆகும். ஜூன் 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 25ம் தேதிக்குள் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை சான்றிதழ் பட்டியல் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.