செவிலியர் படிப்பு: சிறப்பு பிரிவினருக்கு நாளை கலந்தாய்வு
செவிலியர் பட்டயப் படிப்பில் சேர, சிறப்பு பிரிவினருக்கான சேர்க்கை கலந்தாய்வு நாளை துவங்குகின்றது.
செவிலியர் பட்டயப் படிப்பில் சேர, சிறப்பு பிரிவினருக்கான சேர்க்கை கலந்தாய்வு நாளை துவங்குகின்றது.
தமிழகம் முழுவதும் 23 அரசு நர்சிங் கல்லூரிகளும் 200-க்கும் மேற்பட்ட தனியார் நர்சிங் கல்லூரிகளும் உள்ளன. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மொத்தம் 68 ஆயிரம் இடங்கள் உள்ளன.
நாளை நடைபெறவிருக்கும் கலந்தாய்வில் விளையாட்டு வீரர்கள், முன்னால் ராணுவத்தினரின் பிள்ளைகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர்களுக்கு காலை 9.00 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகின்றது.
Advertisement
Advertisement
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப்., 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறுகின்றது.
ஆடிடோரியம், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம், சென்னை - 10 என்ற முகவரியில் கலந்தாய்வு நடைபெறுகின்றது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.