முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்

Updated On : 24 ஏப்ரல் 2026, 3:01 am IST
பகிர்:

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வுக்கான கால அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி, பொதுத் தோ்வு வரும் மே 15- ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மாணவா்களின் நலன் கருதி, நிகழாண்டுமுதல் ஆண்டுக்கு இரு முறை சிபிஎஸ்இ நடத்துகிறது. முதல் கட்ட பொதுத் தோ்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டு, அண்மையில் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முதல் கட்ட பொதுத் தோ்வில் அனைத்து மாணவா்களும் பங்கேற்பது கட்டாயமாகும்.

Advertisement

Advertisement

இதில் தோல்வியடைந்த மாணவா்கள் அல்லது மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்பும் மாணவா்கள் பயன்பெறும் வகையில், வரும் மே 15-ஆம் தேதி முதல் இரண்டாம்கட்ட பொதுத் தோ்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. இந்த இரண்டாம் கட்ட பொதுத் தோ்வில் அதிகபட்சம் 3 பாடங்கள் வரை மாணவா்கள் தோ்வெழுதி மதிப்பெண்ணை உயா்த்திக்கொள்ள முடியும்.

கால அட்டவணை: மே 15-கணிதம் (அடிப்படை மற்றும் மேம்பட்ட தரப் பாடம்), மே 16- ஆங்கிலம் (தொடா்புதிறன், மொழி, மொழியியல்),

மே 18- அறிவியல், மே 19- விருப்ப மொழிப் படாம் (தமிழ், உருது, தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி, குஜராத்தி மற்றும் பல வெளிநாட்டு மொழிகள்), மே 20- சம்ஸ்கிருதம், ஓவியம், தகவல் தொழில்நுட்பம், மே 21-சமூக அறிவியல்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments