முகப்பு
தமிழ்நாடு

பெரம்பூரில் ‘விசில்’ கோலமிட்டு வாக்கு சேகரித்த விஜய்!

பெரம்பூரில் விசில் கோலமிட்டு வாக்கு சேகரித்த விஜய்யைப் பற்றி...

Updated On : 17 ஏப்ரல் 2026, 6:45 pm IST
பெரம்பூரில் ‘விசில்’ கோலமிட்டு வாக்கு சேகரித்த விஜய். - படம்: எக்ஸ்.
பகிர்:

பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ‘விசில்’ கோலமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் சூடிபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மிகத் தீவிரமாகத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, புதுவரவான தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர் போட்டியிடும் சென்னை பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

‘விசில்’ கோலமிட்டு வாக்கு சேகரித்த விஜய்.

அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிமனைக்கு அருகில் உள்ள ஒரு வீட்டு வாசலில் தவெகவின் தலைவர் விஜய், கட்சியின் சின்னமாக ‘விசில்’ சின்னத்தைக் கோலமாகப் போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மாநிலம் முழுவதும் பிரசாரம் மற்றும் வாகனப் பேரணிகளை மேற்கொண்டு வரும் விஜய், நேற்று முன்தினம் சென்னையில் தி.நகர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நேற்று நுங்கம்பாக்கத்தில் தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசியிருந்த விஜய், தவெகவின் சின்னமான ‘விசில்’ சின்னத்தை தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் அவரவர் வீடுகளில் போட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

summary

In the Perambur constituency, Tamilaga Vettri Kazhagam leader Vijay engaged in campaigning by drawing a 'Whistle' kolam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.