தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலையிலும் திருச்சி கிழக்கில் பின்னடைவையும் சந்தித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை பெற்றுள்ளதாகவும் திருச்சி கிழக்கில் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக தலைவர் விஜய் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் பெரம்பூரில் முன்னிலை வகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Advertisement
TVK leader Vijay has faced a lead in Perambur and a setback in Trichy East.