நேரு விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் விஜய்!
நேரு விளையாட்டு அரங்கிற்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவுக்கு, தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பெரும்பான்மைக்கு 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதையடுத்து, காங்கிரஸ், இடதுசாரிகள் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்கிறார்.
தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (மே 10) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இதையொட்டி, முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் தலைமையில் 6000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
இந்த நிலையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவுக்கு, தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.
TVK President Vijay has arrived for the swearing-in ceremony scheduled to take place at the Nehru Stadium in Chennai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.