முகப்பு
தமிழ்நாடு

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு.
பகிர்:

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக (தனிப்பெரும்பான்மை இன்றி) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து ஆட்சியமைக்க காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியிருந்தது.

முதல் ஆளாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. இதையடுத்து, தவெகவுக்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக வெள்ளிக்கிழமை (மே 8) அறிவித்தது.

Advertisement

Advertisement

அதேசமயம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்தது. அதன்படி தவெகவுக்கு விசிகவும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக இன்று தெரிவித்துள்ளது. அந்த வரிசையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தற்போது இணைந்துள்ளது.

ஐயுஎம்எல் சார்பில் 2 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதம் செங்கோட்டையன் வசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து தவெகவின் எம்எல்ஏக்களின் பலம் 120ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தவெகவுக்கு தற்போது 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் விஜய் ஆட்சியமைப்பதில் நீடித்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.

summary

The Indian Union Muslim League (IUML) has announced its unconditional support for TVK to form the government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments