முகப்பு
மேற்கு வங்கம்

15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்

மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி பேசியது பற்றி...

Updated On : 15 ஏப்ரல் 2026, 11:43 am IST
சுவேந்து அதிகாரி - ANI
பகிர்:

மேற்கு வங்கத்தில் இந்த முறை ராமர் ஆட்சிக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பாஜக மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்த தேர்தல் பாஜக சார்பில் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியிலும், நந்திகிராம் தொகுதியிலும் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வங்காள புத்தாண்டு நாளான இன்று, பவானிபூர் தொகுதியில் நடந்துசென்று சுவேந்து அதிகாரி வாக்கு சேகரித்தார்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசுகையில், “திருடர்கள் 15 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இடதுசாரிகள் 35 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஒருமுறை ராமருக்கு வாய்ப்பளியுங்கள்” என்றார்.

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி, சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தாா். அதன்பின் பவானிபூரில் போட்டியிட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

15 Years of Rule by Thieves! Give Ram a Chance—Just Once! — BJP Leader

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.