ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: மோடி
தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மோடி பதிவு...
தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:
''மேற்கு வங்காளத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் முழு பலத்துடன் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
Advertisement
Advertisement
மேற்கு வங்கத்தில் என்னுடைய இளம் நண்பர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்கும்படி நான் தனிப்பட்ட முறையில் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன்''. எனப் பதிவிட்டுள்ளார்.
294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு இன்றும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
முதல்கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 3.60 கோடி போ் (ஆண்கள் 1.84 கோடி, பெண்கள் 1.75 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 465). இவா்கள் வாக்களிக்க வசதியாக, 44,378 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
West bengal 2026 Prime Minister Narendra Modi has urged everyone to participate in the festival of democracy
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.