முகப்பு
வேலைவாய்ப்பு

விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா (AICIL)  நிறுவனத்தில்

Updated On : 12 மே 2013, 2:44 pm IST
பகிர்:

புதுதில்லியில் செயல்பட்டு வரும் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா (AICIL)  நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 42

பணி: நிர்வாக அதிகாரி

Advertisement

Advertisement

கல்வித் தகுதி: விவசாயம், கணினி அறிவியல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறையில் பி.இ., பி.டெக். பி.எஸ்சி (விவசாயம்), அல்லது மார்க்கெட்டிங், சேல்ஸ் துறையில் எம்.பி.ஏ. பட்டம் அல்லது பி.காம். அல்லது ஏ.சி.எஸ், ஏ.சி.டபுள்யூ.ஏ., ஏ.சி.ஏ. ஆகிய ஏதேனும் ஒரு பிரிவுகள் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிலை ஏ, பி, சி, டி, இ, எஃப் என்று கல்வித்தகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. (விரிவாக அறிந்துகொள்ள இணையளத்தை பார்க்கவும்)

சம்பளம்: ரூ. 29,000 - 32,640 + இதர சலுகைகள்.

வயதுவரம்பு: 30க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 100.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் www.aicofindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விவரங்களை நகல் எடுத்து கையில் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2013

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 16.06.2013

மேலும் தேர்வு விவரம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.aicofindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.