முகப்பு
வேலைவாய்ப்பு

வாய்ப்பு உங்களுக்குதான்... துணை ராணுவப் படைப் பிரிவுகளில் கொட்டிக்கிடக்கும் 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக 

Updated On : 23 ஜூலை 2018, 2:58 pm IST
பகிர்:


மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவப் படைப் பிரிவுகளில் காலியாக உள்ள 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

துணை ராணுவப் படைப் பிரிவான மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 21 ஆயிரத்து, 569 வீரர்கள் பணியிடம், எல்லைப் பாதுகாப்பு படை, இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்பட, 54 ஆயிரத்து, 963 பணியிடங்களை எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 

விரைவில் நிரப்பப்படவுள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 முதல் 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிமுறைகளின் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.  

Advertisement

Advertisement

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற் தகுதி தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மத்திய அரசு விரைவில் அறிவிக்கப்பட உள்ள வேலைவாய்ப்பை அறிவிப்பை நாட்டு மக்களுக்காக சேவை செய்ய துடிப்புடன் இருக்கும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments