முகப்பு
வேலைவாய்ப்பு

நேரு யுவகேந்திராவில் 12 ஆயிரம் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!

மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு மார்ச் 3 ஆம் தேதி

Updated On : 25 பிப்ரவரி 2019, 1:31 pm IST
பகிர்:


மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு மார்ச் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து, நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நேரு யுவகேந்திராவில் தேசிய இளையோர் தொண்டராகப் பணியாற்றுவதற்கு 18 முதல் 29 வயதுக்குள்பட்ட  ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.  இவர்களுக்கு மாத மதிப்பூதியமாக  ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.  அடிப்படை கல்வித்தகுதி 10  ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயர்கல்வி,  கணினித்திறன் பெற்றவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், மகளிர் மன்றஉறுப்பினர்களுக்கு முன்னுரிமை  அளிக்கப்படும். முழு நேர மாணவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது. 

 விண்ணப்பங்கள் நேருயுவகேந்திரா www.nyks.nic.in  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க மார்ச் 3  ஆம்  தேதி கடைசி நாளாகும். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.